Nakkheeran
வரலாற்று பின்னணியில் ‘தேசிய தலைவர் 2’ - வெளியான அறிவிப்பு!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் வெளியாகியிருந்தது. இதில் தேவராக ஜே.எம்.பஷிர் என்பவர் நடித்திருந்தார். இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியிருந்தார். எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜையான இன்றைய தினம்(அக். 30) வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தாண்டு தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜையான இன்றைய தினம் தேசிய தலைவர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள…