உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

திரையுலகத்துக்கென்று ஒரு தனி அரசியல் கவசம் - சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வர விரும்புவதன் சூட்சுமமும் இதுதான்

திரையுலகினரை விமர்சிப்பதில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வலதுசாரித் தலைவர்களையோ, அவர்களது கட்சிகளையோ விமர்சிக்க மாட்டார்கள். இடதுசாரிகளை விமர்சிப்பதில் மட்டும் வள்ளல்களாக இருப்பார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாய்ந்து பாய்ந்து விமர்சனம் செய்வார்கள். தங்களுக்குள் இருக்கும் அதிகார மையங்களை மட்டும் விமர்சிக்க மாட்டார்கள். அப்படி யாராவது துணிந்தால், அவருக்கு எதிராக ஒட்டுமொத்தத் திரையுலகமும் அணிதிரளும்.