உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வர்களுக்கு நற்செய்தி: அரசுப் பணி நியமன வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

தமிழக அரசின் அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உச்ச வயது வரம்பினைத் தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வயது உச்சவரம்பு உயர்வு, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BCM, MBC, DNC, SC, ST) மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ஏற்கனவே வழக்கில் உள்ள வயது சலுகையோடு கூடுதலாகப் பொருந்தும். இந்த புதிய வயது உச்சவரம்பு உயர்வு 30.10.2026 முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். 3,000 மீட்டர் உயரத்துக்கு பாய்ந்த சாம்பல் புகை; 6…