Indian Express Tamil
பற்பசை, சமையல் சோடா போதுமா? கண்ணாடி லென்ஸைச் சுத்தம் செய்யும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்!
பார்வைக் குறைபாடு காரணமாகக் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பார்வைக் குறைபாடுகள் அதிகரித்து வருவதால், சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை உருவாகியுள்ளது. அதிலும், நீண்ட நேரம் செல்போன், கணினி, மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது, போதிய வெளிச்சமின்றிப் படிப்பது உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் கண் ஆரோக்கியம் குறித்த கவலையை அதிகரிக்கின்றன. இவ்வாறு அன்றாடம் பயன்படுத்தும் கண்ணாடியில் தூசி, எண்ணெய் பிசுக்கு, வியர்வை மற்றும் கைரேகைகள் படிவது இயல்பான ஒன்றுதான். இதனால் லென்ஸில் பா…