Vikatan
சென்னை: குழந்தையை கொலை செய்த அம்மா கைது; காதலன் சிக்கிய பின்னணி!
சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. தனக்கு திருமணமாகாத நிலையில் குழந்தையை மருத்துவமனையில் பெற்றேடுத்தால் சிக்கல் எனக் கருதிய அந்த இளம்பெண் அங்குள்ள கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது…