Nakkheeran
”இந்தியா கூட்டணியின் டெல்லி பேரணி; தடுக்கும் முயற்சியில் அமித்ஷா” - ராகுல்காந்தி
தேர்தல் (எஸ்.ஐ.ஆர்) முறைகேடு தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீதான புகாரைத் தொடர்ந்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், எஸ்.ஐ.ஆர் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வருகின்ற நவம்பர் 1 அன்று ’இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘பொது கண்டன விசாரணை’ நிகழ்வுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இன்று (30-10-26) மழ…