உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொதுத் தீட்சிதர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல், அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்தும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அதாவது, “கடந்த 2014-ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குப் பிறகும், கோவில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற…