Indian Express Tamil
இட்லி கல்லு மாதிரி இருக்கா? அரிசி மாவு மட்டும் அரைத்தால் போதும்; சூப்பரான சாஃப்ட் இட்லிக்கு இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!
இந்திய அளவில் பிரபலமான முக்கிய உணவுகளில் ஒன்று இட்லி. குறிப்பாக தமிழகத்தில் பலரும் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் முக்கிய உணவே இட்லி தான். தமிழர்களின் விருப்பமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்று. ஆனால், அரிசி மற்றும் உளுந்து மாவு அரைத்து, புளிக்க வைத்து செய்யப்படும் இட்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இருக்கிறது. இட்லி அனைவருக்கும் பிடித்தமான உணவு தான் என்றாலும் கூட, அது சாஃப்ட்டாக இருக்கும்போது சரியாக இருக்கும். ஆனால் இட்லி கல்லு மாதிரி இருந்தால் அதை சாப்பிடும் ஆர்வமே போய்விடும். இதனால் சாஃப்ட் இட்லி செய்ய மாவை எப்படி அரைப்பது, எவ்வளவு நேரம் அர…