Nakkheeran
“கோயிலின் மின் அறையில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம்” - மின்வெட்டு குறித்து அமைச்சர் விளக்கம்!
துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (30.10.2026) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு, அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசத் தொடங்கினார். அதன்படி அவர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. துணை குடியரசுத் தலைவர் பேசும் போதே மின்தடை ஏற்பட்டதால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே திடீர் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி தமிழக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ப…