Indian Express Tamil
துணை ஜனாதிபதி வந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின் வெட்டா? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது, அங்கே மின் வெட்டு ஏற்பட்ட சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். தேவர் ஜெயந்தி திருநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்லேகர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மதுரையில், முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயில…