Polimer News
ஒரே ரூட்டில் தனுஷ் - லெஜண்ட்..! அள்ளிக் கொடுக்குறோம் ஓடியாங்க..! ஓடியாங்க..! இவங்க 2 பேருக்கும் தான் போட்டியே..!
அண்மையில், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ், இயக்க நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 2000 பெண் நிர்வாகிகளுக்கும் வெள்ளியில் காமாட்சி விளக்கு வழங்கப்பட்டது. அதில் தாமரை சின்னம் இருந்ததால் பேசு பொருளாகவும் மாறியது. மாணவர்களை ஈர்க்கும் முயற்சியா? தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்க தனுஷ் நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முதல் தலைமுறை வாக்காளர்களையும், மாணவர்களையும் ஈர்க்கும் ஒரு முயற்சியாகவும்…