Daily Thanthi
உலகக் கோப்பை ஆக்கியை நடத்த தமிழகம் உள்பட 3 மாநிலங்கள் போட்டி
ஜலந்தர், ஆக்கி இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் போலாநாத் சிங் ஜலந்தரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, 2030-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஆக்கி (ஆண்கள் மற்றும் பெண்கள்) போட்டியை நடத்தும் உரிமையை ஆக்கி இந்தியா பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை ஆக்கி போட்டியை நடத்துவதற்கான போட்டியில் ஒடிசா, தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு ஒடிசாவுக்கு கிடைத் தால் அது அந்த மாநிலத்துக்கு ஒரு…