Nakkheeran
மனைவியைக் கொ*ன்று உடலை எரித்த கணவர்; கிராம உதவியாளர் புகாரால் சம்பவம் அம்பலம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, ஊருக்கே தெரியாமல் அவரது உடலை சுடுகாட்டில் எரித்த கணவரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). பெயிண்டரான இவருக்கும், சிவகாமி (30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சமாதானமாகி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 30-ஆம் தேதி மதியம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது…