Hindu Tamil Thisai
சென்னை | இளைஞரை கொலை செய்து கடற்கரை மணலில் புதைத்த 2 பேர் கைது
சென்னை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் நடிகை ராதிகா வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசாந்த் தனது மாமா ரமேஷ் என்பவருடன் வீடுகளுக்கு டைல்ஸ் போடும் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 27-ம் தேதி சென்னையில் உள்ள தமது தாயை பார்க்கச் செல்வதாக தாய்மாமனிடம் கூறிவிட்டு வந்த பிரசாந்த், மறுநாள் 28-ம் தேதி தனது நண்பருக்கு…