உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மீஞ்சூரில் தொடர் மின்வெட்டு; நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்!

மீஞ்சூர் அருகே பல மணி நேரம் நீடித்த மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல். மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலட்சிய போக்குடன் பதிலளிப்பதாக புகார். பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பல நேரம் நீடித்த மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் பட்டமந்திரி பகுதியில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும…