Nakkheeran
ரூ.634 கோடி ஊழல் வழக்கில் தொடர்பா?; நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்
கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் சின்னத்திரை நடிகைகள் ஷபானா, ஜனனி அசோக் குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தது. இந்த நிலையில் நடிகை ஜனனி அசோக் குமார் தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “கடந்த 2 நாட்களாக என்னைப் பற்றிப் பரப்பப்…