Polimer News
தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாளை மறுநாள் நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் 3ஆம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்…