உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”1 கோடி இந்துக்களின் பெயர்கள் நீக்கம்”; கவலையில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் காரணமாக ஒரு கோடிக்கும் அதிமகான இந்து வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்திய நாத் கவலை தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, எஸ்.ஐ.ஆர் பணிகள் மும்மரமாக நடைபெற்றன. இதன் விளைவாக, அங்கு 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான யோகி ஆதித்தய நாத் கவலை தெரிவித்துள்ளார். தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க தொண்டர்கள் விழிப்புடன் செயல்ப…