Hindu Tamil Thisai
நாகையில் எலெக்ட்ரீசியன் வீட்டில் ரூ.4.88 லட்சம் பணத்தை அரித்து சேதப்படுத்திய கரையான்கள்
நாகப்பட்டினம்: நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வமுருகன். எலெக்ட்ரீசியனான இவர், சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை வீட்டிலுள்ள மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில், வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவதற்காக பணத்தை எடுக்க 2 தினங்களுக்கு முன் அலமாரியைத் திறந்தபோது, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்து சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு…