Indian Express Tamil
கறிவேப்பிலை, புதினா சீக்கிரம் அழுகுதா? இனி பல மாதங்கள் வரை ஃபிரெஷ்ஷா வைக்கலாம்; இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்
நமது அன்றாட சமையலில் கறிவேப்பிலையும் புதினாவும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குழம்பு, ரசம், பொரியல், சட்னி எனப் பல்வேறு உணவுகளுக்கு மணமும் சுவையும் சேர்ப்பதில் இவற்றின் பங்கு அதிகம். இதனால் வாரந்தோறும் சந்தைக்குச் செல்லும்போது கறிவேப்பிலை, புதினா போன்றவற்றை வாங்கி வருவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், புதிதாக வாங்கி வந்த சில நாட்களிலேயே இலைகள் கருத்துப்போவது, வாடிப்போவது, காய்ந்து உதிர்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் பிரிட்ஜில் வைத்திருந்தாலும் இலைகள் அழுகிவிடுகின்றன. இதனால் பணம் செலவழித்து வாங்கிய பொருட்களைப் பயன்படுத்த முடியாமல் குப்பையில் வீச வேண்டிய நிலை ஏற்படு…