Indian Express Tamil
அமைதியை விரும்பும் சமூகம் ஏன் கோபக்காரத் தலைவர்களை உருவாக்குகிறது? தானை தலைமக்கள் பாகம் 15
சுப. உதயகுமாரன் தமிழ்நாட்டின் மூத்த மற்றும் முன்னுதாரணமாய்த் திகழும் தலைவர்களுள் ஒருவரான ஐயா. பழ. நெடுமாறன் அவர்கள் “களங்களில் உருவாகும் தலைவர்கள்” என்றொரு கட்டுரையை தினமணி நாளிதழில் (செப்டம்பர் 9, 2012) எழுதினார்: “போராட்டக் களங்களில் தான் உண்மையான மக்கள் தலைவர்கள் உருவாகிறார்கள். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பூத்த புரட்சி மலர்தான் அண்ணல் காந்தியடிகள் ஆவார். வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் இராஜாஜியின் தலைமை உருவாயிற்று. வைக்கம் போராட்டம் பெரியார் இராமசாமி அவர்களைப் பெற்றெடுத்தது. நீலன் சிலை அகற்றும் போராட்டம், நாகபுரி வாள் போராட்டம் போன்ற போராட்டங்களைத் திட்டமிட…