Puthiya Thalaimurai
’முரசு’ புயல் இன்று உருவாக வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…