Hindu Tamil Thisai
ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை - பாரத் பெட்ரோலியம் அணிகள் மோதல்
சென்னை: எம்சிசி-முருகப்பா அகில இந்திய ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே அணி, இந்திய கடற்படை அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. ரயில்வே அணி தரப்பில் பிரதாப் லக்ரா (39-வது நிமிடம்), அதுல் தீப் (55-வது நிமிடம்…