Polimer News
சென்னையில் ஏசி தீப்பிடித்து விபத்து - மாற்றுத்திறனாளி பெண் பலி..!
சென்னை கொரட்டூரில், ஏசி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் சம்பவத்தில், மாற்றுத்திறனாளி பெண்ணை உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் விவேகானந்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 55 வயதான ரமணி என்பவர், தனது மனைவி அகிலா மற்றும் மகன் கார்த்திக் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் இரவில் வீட்டில் ஏசி பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாலை ஏசியில் திடீரென தீ பற்றி படுக்கை அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் லேசான காயங்களுடன் கணவர் ரமணி மற்றும் மகன…