உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெரும் வெள்ள பாதிப்புக்கு மத்தியிலும் நேபாளம் இந்தியாவுக்கு மின்சாரத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்தது எப்படி?

Pratyush Deep ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நீர்மின் திட்டங்களை சேதப்படுத்தி, மின் விநியோகத்தைப் பாதித்த போதிலும், அதைத் தொடர்ந்து வந்த இரண்டு மாதங்களில் நேபாளம் இந்தியாவுக்கு ரூ.725 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மின்சாரத்தை ஏற்றுமதி செய்துள்ளது என நேபாள மின்சார ஆணையம் (NEA) தரவுகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் தாக்கிய ஆகஸ்ட் 27 முதல் அக்டோபர் 27 வரையிலான காலத்தில், நேபாளம் இந்தியாவுக்கு சுமார் 1,262 மில்லியன் யூனிட் (MU) மின்சாரத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2025-26 நிதியாண்டில் நேபாளம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்த மொத்த மின்சாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்குச் சமமாகும…