Hindu Tamil Thisai
கொடைக்கானலில் ‘போதை காளான்’ விற்பனை அதிகரிப்பு - தீவிரம் ஆகுமா தடுப்பு நடவடிக்கை?
கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மூலம் சுற்றுலாப் பயணிகளிடம் போதை காளான் விற்பனை செய்யும் நபர்கள் மீதான நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ‘மேஜிக் மஸ்ரூம்’ எனும் போதைக் காளான் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. கொடைக்கானலை பொறுத்தவரை வழக்கமாக மதுவும், கஞ்சாவும், போதை காளானும்தான் பெரிய அளவில் பயன்பாட்டில்…