உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எண்ணெய் பாட்டில் தொட்டாலே பிசுபிசுக்குதா? வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்... புதுசு மாதிரி மாறிடும்!

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் சமையல் எண்ணெய் பாட்டிலும் முக்கியமான ஒன்று. சமையல் செய்யும்போது எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவதால், பாட்டிலின் வெளிப்புறம், மூடி மற்றும் கழுத்துப் பகுதியில் எண்ணெய் கசிந்து படிவது வழக்கம். ஆரம்பத்தில் ஒரு சில துளிகளாகத் தெரியும் இந்த எண்ணெய், நாளடைவில் பிசுபிசுப்பான படலமாக மாறிவிடும். குறிப்பாக, எண்ணெய் பாட்டிலைப் பிடிக்கும் இடங்கள், மூடியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பாட்டிலின் அடிப்பகுதியில் இந்த அழுக்கு அதிகமாகச் சேரும். இதனை முறையாகச் சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், எண்ணெய்ப் படலத்துடன் சமையலறையில் உள்ள தூசியும் சேர்ந்து பாட்டிலின் தோற்றத…