Indian Express Tamil
மழைக்காலத்தில் நெல் வீணாவதற்கு முற்றுப்புள்ளி: கடலூரில் 7,000 டன் நெல் நவீன சேமிப்புக் கிடங்குகள் திறப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) நிதி உதவியுடன் ரூ.11.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 புதிய நெல் சேமிப்புக் கிடங்குகளை அமைச்சர் பி. வெங்கடரமணன் சனிக்கிழமை திறந்து வைத்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்யும் நெல் மூட்டைகள் மழை மற்றும் இயற்கை பேரிடர்களால் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் ரூ.11.56 கோடி செலவில் கட்டப்பட்ட இரண்டு அதிநவீன நெல் சேமிப்புக் கிடங்குகளைத் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன் சனிக்கிழமை திறந்து வைத்தா…