Daily Thanthi
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்றார்…