IBC Tamil
அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் : கிராமம் கிராமமாக அம்பலப்படுத்தவுள்ள மொட்டு
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), கொழும்பு மாவட்டத்தில் தொடங்கி, நாடு முழுவதும் கிராம மட்டத்திலான கூட்டங்களை திங்கட்கிழமை (2) முதல் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாரத்தில் ஐந்து நாட்கள் கட்சியின் கிளைகள் மற்றும் தொகுதி மக்களுடன் சந்திப்புகள் நடத்தப்படவுள்ளன. ...