Indian Express Tamil
அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ 5 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சியா? இதுபோல் கருத்து கூறிய இன்னொரு பிரபலம் மீது பாய்ந்த சி.பி.ஐ வழக்கு: மூத்த ஊடகவியலாளர் கருத்து
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், இது அவருக்கு எதிராகவே திரும்ப வாய்ப்பு உள்ளதாக மூத்த ஊடகவியலாளர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த விழாவை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக்கல்வி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள், அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ. 5 கோடி தருகிறேன் என ஒருத்தர் பேசினார். இது லயோலா மணிக்கும் தெ…