உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கர்நாடக தினம் : மாநிலக் கொடி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, இன்று (01.11.2026) அம்மாநிலம் முழுவதும் ‘கன்னட ராஜ்யோத்சவா’ (கர்நாடக தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று, கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், 1973ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று அம்மாநிலத்திற்கு முறைப்படி 'கர்நாடகா' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, மாநில ழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்…