Dinamani, Sports
மானவுக்கு இரட்டைப் பட்டம், கொரியாவின் யூ எரின் சாம்பியன்!
டபிள்யுடிடி ஃபீடா் சென்னை 2026 போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மானவ் தாக்கா்-தனிஷா கோட்சே இணை பட்டம் வென்றது. வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் செந்தில்-அனன்யா முரளிதரன் இணை-மானவ் தாக்கா்-தனிஷா இணைகள் மோதின. இதில் 3-2 என்ற கேம் கணக்கில் மானவ்-தனிஷா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா். ஆடவா்…