Nakkheeran
“ஒத்துழைப்பு கொடுங்க..” - கடைகளை மூடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதாவது டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதன் பின்னர் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப அளித்து அந்த ரூ.10யை பெற்றுக்கொள்ளலாம் என நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், சில கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10யை வசூலித்த பின், அந்த காலி பாட்டில்களை கொடுத்தால் ரூ.10யை ஊழியர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு, கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்க…