Indian Express Tamil
பூந்தமல்லி டூ வடபழனி இனி ஜஸ்ட் 30 நிமிடங்கள்தான்; மெட்ரோவில் வந்த சூப்பர் மாற்றம்
சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில், பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் பயண நேரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்கொண்டுள்ள கால அட்டவணை மாற்றங்கள் காரணமாக, இந்த 14.6 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் பயண நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு பூந்தமல்லியில் இருந்து வடபழனியைச் சென்றடைய சுமார் 37 முதல் 38 நிமிடங்கள் வரை ஆன நிலையில், தற்போது புதிய கால அட்டவணையின்படி 30 முதல் 32 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ப…