IBC Tamil
13 பயிர்களுக்கு விவசாய மானியம் : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் முதன்முறையாக நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 உணவுப் பயிர்களுக்காக விவசாய மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வகையிலான அதிமேலதிகத் தொகையை தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியமாக வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துச் செயற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "விவசாயிக...