IBC Tamil
கொபெய்கனே காவல் நிலையத்தில் சந்தேக நபர் உயிரிழப்பு: சர்ஜென்ட்டுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கொபெய்கனே காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காவல் சார்ஜென்ட்டுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றில் முன்னிலை நேற்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த காவல் சார்ஜென்ட்டை இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.