உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆப்பிள், சாம்சங்க ஃபாலோ பண்ணும் லாவா: நவம்பர் 15 முதல் ரூ.3,000 வரை விலை ஏற்றம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'மெமரி' உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முன்னணி பிராண்டுகள் பலவும் தங்கள் போன்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், உள்நாட்டு நிறுவனமான லாவாவும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.3,000 வரை உயர்த்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகிற நவம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென விலையை உயர்த்துவது வழக்கம். ஆனால், லாவா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் சுதாரித்துக் கொள்ள சுமார் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலம் ம…