Dinamani
இரு வாரங்களில் 3,000 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் மீது நடவடிக்கை: காஷ்மீர் காவல்துறை
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த இரு வாரங்களில் காஷ்மீர் மண்டல காவல்துறை 3,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். காஷ்மீர் மண்டலத்தின் 10 மாவட்டங்களில் சுமார் 1,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதற்காக 500-க்கும் மேற்பட்ட வழக்குகளும்…