உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சென்னை To புதுச்சேரிக்கு படகு சேவை - தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்டம்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவையை தொடங்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னை - புதுச்சேரி இடையேஉள்ள சுமார் 80 கடல் மைல் தொலைவு கொண்ட கடல் வழி பயணம் விரைவில் சாத்தியமாகும் எனக் கூறிய அதிகாரிகள் படகு சேவையை இயக்க தனியார் படகு சேவை நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது ECR சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும்ஏன்ற நிலையில், கடல் வழியாக ஒரு புதிய சுற்றுலா அனுபவத்தை உருவாக்கி,சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி மூன்று இடங்களையும் இணைத்து Integrated Tourism Circuit அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறினர்