Indian Express Tamil
இதயத்தை எரிக்க ரவுடிகள் முயற்சி; சந்திரகலா சூழ்ச்சியால் சாமுண்டீஸ்வரி ஆப்ரேஷன் நடக்குமா? கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: கார்த்திக்கின் அதிரடிப் போராட்டம்... இதயத்தைக் காப்பாற்ற முடியுமா? ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், இந்த வாரம் கார்த்திக்குக்கு அடுத்தடுத்து சோதனைகள் காத்திருக்கின்றன. உயிரைக் காப்பாற்ற வேண்டிய இதயத்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க கார்த்திக் போராடும் பரபரப்பான காட்சிகள் திங்கட்கிழமை எபிசோடில் இடம்பெறுகின்றன. உயிரைக் காப்பாற்ற வேண்டிய இதயத்தை ஆம்புலன்ஸில் எடுத்துக் கொண்டு கார்த்திக் வேகமாகப் பயணம் செய்கிறார். அப்போது வழியில் குறுக்கிடும் ரவுடிகள், கார்த்திக்கைத் திசைதிருப்பி வண்டியை நிறுத்த வைக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்புலன்ஸ…