Hindu Tamil Thisai
நகராட்சித் துறை பணிநியமன முறைகேடு: கே.என்.நேரு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
புது டெல்லி: நகராட்சித் துறை அதிகாரிகள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன…