Indian Express Tamil
வெள்ளை வினிகரை கத்தியில் பயன்படுத்தலாமா? துருவை நீக்கும்போது இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க
சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் கத்தியும் ஒன்று. காய்கறிகள், பழங்கள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு கத்திகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், தொடர்ந்து பயன்படுத்தும் கத்திகளைச் சரியாகப் பராமரிக்காவிட்டால், நாளடைவில் அவற்றின் மேற்பரப்பில் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் துருப் புள்ளிகள் தோன்றத் தொடங்கும். குறிப்பாக, கத்தியைப் பயன்படுத்திய பிறகு கழுவாமல் அப்படியே வைப்பது, ஈரப்பதத்துடன் சேமிப்பது, சிங்கில் நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவிடுவது போன்றவை துரு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும். இதனால் கத்தியின் தோற்றம் பாதிக்கப்படுவதுடன், அதன் மேற்பரப்பில் அரிப்பும் ஏற்…