Polimer News
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நவம்பர் 7ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு; தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல். முரசு புயல் ஆந்திரப் பகுதியில் கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் காரணமாக…