Vikatan
`அவங்க முகத்துல வர சந்தோசம்தான்.!' - உடைந்த சிலைக்களுக்கு புத்துயிர் ஊட்டும் கலைஞர்
ஒன்று உடைந்துவிட்டால், தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை தேடிச் செல்லும் காலத்தின் ஓட்டத்தில், உடைந்த சிலைகளுக்கும் புத்துயிர் ஊட்டி வருகிறார் கந்தன் (46). சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள இவரின் எளிமையான தெருவோரக் கடையில் பரபரப்பாகச் சிலைகளுக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவரிடம் மெள்ளப் பேசத் தொடங்கினோம். "நான் என்னோட பதினான்கு வயசு இருக்கும்போது பெயிண்ட் அடிக்கிற வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்ப இந்த இடத்துல எங்க…