Indian Express Tamil
விமானத்தில் செல்வதைப் போலவே ரயிலிலும் செல்லலாம்; சென்னை – பெங்களூரு இடையே 73 நிமிடப் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ள தெற்கு புல்லட் ரயில் வழித்தடம், பெங்களூரு, ஹைதராபாத், அமராவதி, சென்னை ஆகிய நகரங்களை இணைக்க உள்ளது. இந்த வழித்தடத்தில் பெங்களூரு – சென்னை இடையிலான பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு நகரங்களும் ஒரே நகரமாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களுடன் ஒப்பிடும்போது புல்லட் ரயிலின் பயண நேரம் எவ்வளவு குறையும் என்பதைப் பார்க்கலாம். சென்…