Polimer News
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த டிரம்புக்கு நெதன்யாகு அழுத்தம்?
அமெரிக்காவில், இடைக்காலத் தேர்தல் நிறைவடைந்ததும், ஈரானை உடனடியாகத் தாக்குமாறு டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது. துணை அதிபர் வேன்ஸும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி, ஈரானுக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். ஈரானில், ஓரிரு அணுசக்தி நிலையங்களை மட்டுமே தாக்க வேண்டி உள்ளதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நெதன்யாகு மட்டுமே போரை மீண்டும் தொடங்குமாறு வலியுறுத்திவருவதாக கூறப்படுகிறது.