Indian Express Tamil
கரையை கடக்கும் முரசு புயல்: திருச்சி - சென்னை விமான சேவை ரத்து: ஏர்போர்ட் நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்
வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்படவிருந்த 5 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 6 விமானங்களும் என மொத்தம் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடா உள்ளிட்…