உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விஜய்க்காக சாலையில் இறங்கி ஓடிய பெண் எஸ்.பி; இவர் யார் தெரியுமா?

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் புதுக்கோட்டை வந்தபோது, திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி ஒருவர் சாலையில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலர்களுடன் கம்பீரமாக ஓடி வரும் இந்த பெண் எஸ்பி யார் என்று வியந்தவர்களுக்கு மேலும் ஒரு வியப்பு பதிலாக கிடைத்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திங்கள்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம…