Nakkheeran
குழந்தையால் எழுந்த சர்ச்சை; ‘இருமுடி’ படக்குழுவிற்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ்
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியான படம் ‘இருமுடி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். சபரிமலை சுவாமி பின்னணியில் ஆக்ஷன், செண்டிமெண்ட், பக்தி உள்ளிட்ட அம்சங்களோடு உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றறது. வசூலிலும் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி நக்ஷத்ரா நடித்திருந்தார். இவரது நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் இவரது பாதுகாப்பு, பணிச்சூழல் மற்றும் ஊதியம் தொடர்பாக ஜெய் லோக…